Producer decided that dont want of part 2

பெரிய எதிர்பார்ப்ப்டன் வெளியான சர்ச்சை நடிகரின் படம் படுதோல்வியடைந்து விட்டது. வழக்கமாக விமர்சகர்கள் மட்டும் தான் சர்ச்சை நடிகர் படத்தை கழுவி ஊற்றுவார்கள் ஆனால் இந்த படத்துக்கு நடிகரின் ரசிகர்களே கழுவி ஊற்றி வரலாற்று சாதனை படமாக்கி விட்டார்கள். 

இந்நிலையில் படத்தின் முடிவில் இரண்டாம் பாகம் வரும் என அறிவித்ததற்கும் சேர்த்தே கழுவி ஊற்றல் தொடர்கிறது. எனவே இரண்டாம் பாகம் எடுக்கலாம் என்ற முடிவு கைவிடப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. முதியவர் தோற்றம் வரும் பாதி படம் படமாக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்னொரு இளைய கெட்டப் இன்னும் படமாக்கப்படவில்லை.

நடிகர் தான் சொன்னபடி உடலைக் குறைத்து ஸ்லிம் ஆவார் என இனி எதிர்பார்க்க முடியாது. முழுக்க முழுக்க கிராஃபிக்ஸ் பண்ணினால் அது ஒரு படத்தின் பட்ஜெட்டையே விழுங்கும். 

எனவே நஷ்டம் போனதோடு போகட்டும். இனிமே கல்லை கயிற்றைக் கட்டி கடலில் இறங்க முடியாது என்று யோசிக்கிறாராம் தயாரிப்பாளர்.

சொன்னப்பவே கேட்டுருக்கணும்...