தமிழ் சினிமாவில், தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நடிகை ஸ்ரீரெட்டியை, விபச்சாரி என்று கூறி கடுமையாக விமர்சித்தவர் வாராகி.

இந்நிலையில், தற்போது இவர் எப்படி தன்னை 'விபச்சாரி' என்று விமர்சிக்கலாம் என சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. 

ஏற்கனவே நடிகர் சங்க பிரச்சனையில் தலையிட்ட, வாராகி ஏன் ஸ்ரீரெட்டிக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை அறிந்து கொள்ளும் விதத்தில், நம் செய்தியாளர் வாரகியிடம் தொடர்பு கொண்டு பேசிய போது, நடிகை ஸ்ரீரெட்டி மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை வைத்தார். 

ஸ்ரீரெட்டி புகார்:

ஸ்ரீரெட்டியின் புகார் குறித்து பேசிய வாராகி, இந்திய சட்டத்தின் கீழ், யார் மீது வேண்டுமானாலும், ஒருவர் குற்றம் சுமத்தலாம் அதற்கு உரிமை உண்டு. அதனை நானும் சட்டப்படி சந்திப்பேன் என கூறினார்.

விபச்சாரி என கூறியது சரியா?

இதைதொடர்ந்து நடிகை ஒருவரை, விபச்சாரி என்று நீங்கள் விமர்சித்துள்ளது ஏன்..? என்ற கேள்விக்கு பதில் அளித்த வாராகி. தன்னுடைய சுயநலத்திற்காக அவர் சில நடிகர்களையும் இயக்குனர்களிடம் படுக்கையை பகிர்ந்துள்ளார். அவர் குழந்தை கிடையாது ஏமாற்றுவதற்கு, எல்லாம் தெரிந்தே அவர் செய்ததை எப்படி ஏமாற்றம் என கூறலாம். விபச்சாரி போல் நடந்து கொண்டு ஏமாற்றப்பட்டேன் என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பது என் கருத்து என அடித்து கூறினார்.

சத்தியமா வரவேற்பேன்:

ஆனால் ஒரு வேலை ஸ்ரீரெட்டி இது போன்ற எந்த தவறையும் செய்யாமல், தன்னை நடிகர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று மீடியா முன் கூறியிருந்தால், சத்தியமாக அவருக்கு நான் தான் இன்று பக்க பலமாக நின்று போராடி இருப்பேன் என கூறினார்.

டீல் பேசப்படும் ஸ்ரீரெட்டி:

பின் இவர் கூறிய தகவல் அதிர்ச்சியை கிளப்பியது. 'நடிகை ஸ்ரீரெட்டியை வைத்து சில டீல் பேசி வருவதாகவும், இதன் பின்னணியில் தயாரிப்பாளர்கள் சிலர் உள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.