producer council release new channel

நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, பல்வேறு தடாலடி முடிவுகளை எடுத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சினிமா டிவி என்கிற தொலைக்காட்சியை, தயாரிப்பாளர்கள் சார்பாக ஆரம்பிக்க உள்ளார்களாம்.

மேலும் இனி வரும் காலங்களில், அனைத்து படங்களின் பாடல், சாட்டிலைட் உரிமை போன்ற அனைத்தும், சினிமா டிவியை தவிர மற்ற தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தொலைக்காட்சிக்கு, துணை சேனலாக சினிமா மியூசிக் சேனல் ஆரம்பிக்கப்படும் என்றும் இதில் 24 மணிநேரமும், பாடல்கள் ஒளிபரப்ப உள்ளதாகவும், இதே போல் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ஒரு சேனல் உருவாக்கப்பட உள்ளதாகவும், மற்ற எந்த ஒரு தொலைக்காட்சிக்கும் சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களை ஒளிபரப்ப அனுமதி அளிக்கப்படாது என்று கூறப்படுகிறது.

திரைத்துறையை சார்ந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் சினிமா டிவி யில் மட்டுமே ஒளிபரப்பும் நோக்கத்தில் தீர்மானமாக உள்ளதாகும், தீபாவளி , பொங்கல் போன்ற விழாக்களில் நடிகர், நடிகைகள் பேட்டிகளும் இந்த தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கை முழுவதும், மற்ற தொலைக்காட்சிகளுக்கு எதிராகவே உள்ளதால் இதனை மற்ற மீடியாக்கள் ஏற்குமா... எதிர்க்குமா... என பொறுத்து தான் பார்க்கவேண்டும்.