Pizza 4 Coming Soon : பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி குமார், தங்கம் சினிமாஸ் என்கின்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வெளியிட உள்ள திரைப்படம் தான் பீட்சா 4. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகரின் மகன் நாயகனாக நடிக்கிறார்.

தமிழ் திரையுலகில் அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் பா. ரஞ்சித் என்பது அனைவரும் அறிந்ததே. அதே அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் தயாரிப்பாளராக களம் இறங்கியவர் தான் சி.வி. குமார். இவருடைய திரு குமரன் என்டர்டைன்மென்ட் நிறுவனம் பல வெற்றி திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு இருக்கிறது. 

குறிப்பாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்த திரைப்படமான பீட்சா திரைப்படத்தை கடந்த 2012 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்டது சி.வி குமார் அவர்கள் தான். அதை தொடர்ந்து வெளியான சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி, முண்டாசுப்பட்டி, எனக்குள் ஒருவன், இறுதிச்சுற்று மற்றும் இறைவி என்று பல திரைப்படங்களை தயாரித்துள்ளர் சி.வி குமார். 

Nayanthara New Year: காத்து வாக்கில் குழந்தைகளை கொஞ்சியபடி... விக்கியை முத்தமிட்டு நியூ இயர் கொண்டாடிய நயன்!

இறுதியாக பீட்சா 3 தி மம்மி என்கின்ற திரைப்படத்தை அஸ்வின் காகமாவு நடிப்பில் தயாரித்து வெளியிட்டு இருந்தார். இயக்குனராகவும் மூன்று திரைப்படங்களை இயக்கியுள்ள சி.வி குமார் தற்பொழுது பீட்சா திரைப்படத்தின் நான்காம் பாகத்தை எடுக்கவிருக்கிறார். இந்த திரைப்படத்தில் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அபி ஹாசன் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கவுள்ளார்.

Scroll to load tweet…

இவர் தமிழ் திரையுலகில் மூத்த நடிகராக திகழ்ந்து வரும் நாசர் அவர்களின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. "பீட்சா 4 ஹோம் அலோன்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஆண்ட்ரூஸ் என்பவர் இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்ற உள்ள பிற கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பீட்சா 1 திரைப்படத்தை தவிர மற்ற பாகங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பீட்சா படத்தை கடந்த 2012ம் ஆண்டு இயக்கியது பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.