Asianet News TamilAsianet News Tamil

சூது கவ்வும் பட தயாரிப்பாளருக்கு நேர்ந்த சோகம்! திரையுலகில் பரபரப்பு!

திரையுலகை சேர்ந்தவர்கள் எப்போதும் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகவே உள்ளது. சினிமாவை தாண்டி இவர்கள் மற்ற தொழிலில் ஈடுபடும் போது ஏற்படும் பிரச்சன்னைகள் இவர்களை விட இவர்களை சார்ந்தவர்களையும் பாதிக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது பிரபல தயாரிப்பாளர்அபினேஷ் வாழ்க்கையில் அரங்கேறியுள்ள சம்பவம். 

producer abinesh father attack some persons
Author
Chennai, First Published Sep 23, 2018, 3:58 PM IST

திரையுலகை சேர்ந்தவர்கள் எப்போதும் சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகவே உள்ளது. சினிமாவை தாண்டி இவர்கள் மற்ற தொழிலில் ஈடுபடும் போது ஏற்படும் பிரச்சன்னைகள் இவர்களை விட இவர்களை சார்ந்தவர்களையும் பாதிக்கிறது என்பதை உணர்த்தியுள்ளது பிரபல தயாரிப்பாளர்அபினேஷ் வாழ்க்கையில் அரங்கேறியுள்ள சம்பவம். 

'சூது கவ்வும்', 'இன்று நேற்று நாளை', 'இறைவி', 'காதலும் கடந்து போகும்' ஆகிய சிறந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன்.

இவர் திரைப்பட தயாரிப்பையும்  தாண்டி, மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகித்து வருகிறார்.  அண்மையில் கூட MVK என்ற மருத்துசமனையை வாங்கினார்.

இந்த மருத்துவமனையை இவர் வாங்கிய பின்  மருத்துவமனை ஆவணங்களை நிர்வாகம் செய்து வந்த பாரதி மோகன் என்பவர்  தர மறுத்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால் இருவருக்குள்ளும் வாக்கு வாதம் இருந்துள்ளது.

இந்த நேரத்தில் அபினேஷின் அப்பா DR.டி. இளங்கோவன் சில அடியாட்களால் பயங்கரமாக தாக்கப்பட்டுள்ளார், இதில் இவருடைய தலை, கை, கால்கள் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, இதானால் இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அபிஷேக், தன்னுடைய அப்பாவின் இந்த நிலைக்கு முக்கிய காரணம்  பாரதி மோகன் தான் என்றும் மீது போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களை இயக்கிய இயக்குனரின் தந்தை அடியாட்களால் தாக்கப்பட்ட சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios