Priyanka Deshpande announce new reality Show : பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்திற்கு பிறகு அடுத்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து அறிவித்துள்ளார்.
Priyanka Deshpande announce new reality Show : விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று சொல்லப்படும் பிரியங்கா தேஷ்பாண்டே சமீபத்தில் 2ஆவது திருமணம் செய்து கொண்டார். தனக்கென்று அதிக ரசிகர்கள் பட்டாளங்களை கொண்டுள்ளார். திறமையான பாடகரும் கூட. சில சமயங்களில் சசிகுமார் போன்று சிரிக்கவும் செய்வார். ஏராளமான ஷோக்களை தொகுத்து வழங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். எனினும், அவர் டைட்டில் ஜெயிக்கவில்லை.
ஆனால் குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வென்றார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவருடன் முதல் திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2022-ம் ஆண்டு பிரவீனை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் பிரியங்கா தேஷ்பாண்டே.
இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16-ந் தேதி தான் டிஜே வசி சச்சி என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மேலும் அவரின் இரண்டாவது கணவர் நரை முடியுடன் காணப்பட்டதால், வயதானவரை பிரியங்கா திருமணம் செய்துகொண்டதாக விவாதங்கள் எழுந்தன. பின்னர் தான் வசி பற்றிய விவரங்கள் வெளிவந்தன. அவருக்கு 42 வயது தான் ஆகிறது என்றும், இருவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு பிறகு பிரியங்கா தேஷ்பாண்டே மற்றும் வசி சச்சி இருவரும் ஹனிமூன் சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அப்போது அங்கு தன்னுடைய 33-வது பிறந்தநாளையும் கொண்டாடி இருக்கிறார் பிரியங்கா. இந்த நிலையில் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு புதிய ஷோ ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். இது குறித்து அவரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 ரியாலிட்டி ஷோ தொடங்க இருக்கும் அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான புரோமோவும் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DKhOeIUvEC6/?utm_source=ig_web_copy_link