ஒரு திரைப்படத்தில் நடிக்க ஆறு கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கி நடிகை பிரியங்கா சோப்ரா பிரபல ஹீரோக்களின் பொறாமைக்கு ஆளாகியுள்ளார்.   தமிழில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகம் ஆனவர் பிரியங்கா சோப்ரா. இதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் பிரியங்கா நன்கு பரிட்சயம் ஆனவர். இவர் தற்போது இந்தியில் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறார். இந்தியில் பிரபலமாக இருந்த இவர் பே வாட்ச் எனும் ஆங்கில படத்திலும் நடித்துள்ளார். தொடர்ந்து குவாண்டிகோ எனும் ஆங்கில தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் ஏறக் கூட பிரியங்கா சோப்ராவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த அளவிற்கு இந்திய நடிகையாக இருந்து தற்போது ஹாலிவுட்டிலும் பிரியங்கா சோப்ரா முன்னணியில் உள்ளார். ஹாலிவுட் சென்ற பிறகு இந்திப்படங்கள் எதிலும் நடிக்காமல் தவிர்த்து வந்த பிரியங்கா சோப்ரா தற்போது சல்மான் கானுக்கு ஜோடியாக பாரத் எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதுநாள் வரை இந்திப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த பிரியங்கா திடீரென சல்மான் கானுடன் நடிக்க ஒப்புக் கொண்டது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. இதற்கான பதில் பாரத் படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ராவுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஊதியம் தான். வெறும் 15 அல்லது 20 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்தால் போதும் ஆறரை கோடி ரூபாய் சம்பளம் என்று தயாரிப்பாளர் கூறியுள்ளார். இதனை கேட்ட பிரியங்கா சோப்ரா உடனடியாக பாரத் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்தியில் முன்னணியில் உள்ள நடிகர்கள் பலருக்கும் ஒரு படத்தில் நடிக்க ஊதியமாக இரண்டு கோடி ரூபாய் வரை தான் வழங்கப்படுகிறது.  ஆனால் நடிகை ஒருவருக்கு வெறும் 15 நாட்கள் கால்ஷீட்டிற்கு ஆறரை கோடி ரூபாய் கொடுக்க இருப்பது இந்தி திரையுலக நடிகர்களை மட்டும் அல்ல அனைத்து மாநில நடிகர்களையும் பொறாமை பட வைத்துள்ளது.