கடந்த வருடம் டிசம்பர் மாதம் பாலிவுட், ஹாலிவுட், மற்றும் கோலிவுட் திரையுலக பிரபலங்கள் ஆச்சரியப்படும்படி நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனாஸ் திருமணம் ஜோத்பூரில் உள்ள  'ராயல் உமைத் பவன் பேலஸில் வெகு விமர்சையாக நடந்தது.

மூன்று நாட்கள் கோலாகலமாக நடந்த இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தினர். எனினும் மிகவும் குறைவான வயதுடைய நிக் ஜோனாஸை பிரியங்கா சோப்ரா திருமணம் செய்து கொள்கிறார் என ஒரு பக்கம் விமர்சனங்களும் எழுந்தது.

இந்நிலையில் திருமணமான மூன்றே மாதங்களில் இவர்களுடைய திருமண உறவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், விவாகரத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அமெரிக்கா ஊடகமான 'gossip . com " தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி ஹாலிவுட் முதல் அனைத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இந்த பிரிவுக்கு காரணமாக கூறப்படுவது,  ஆரம்பத்தில் தன் காதலனுடன் இனிமையாக நடந்து கொண்ட பிரியங்கா சோப்ரா,  தற்போது அவரை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி அடிக்கடி கோப முகத்தை காட்டி கடுமையாக சண்டை போடுகிறாராம்.  

மேலும் குறிப்பிட்ட வயதை தாண்டிய பின்னும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல், தொடர்ந்து திரைப்படம் நடிப்பது குடி - கும்மாளம் என நண்பர்களுடன் அதிக நேரத்தைச் செலவிடும் பிரியங்கா குடும்பத்தை கவனிக்காமல் இருப்பதுதானாம்.

இதனால் விரக்தி அடைந்த நிக் ஜோனாஸ் குடும்பத்தினர் பிரியங்காவை விவாகரத்து செய்யக்கோரி வலியுறுத்தி வருகிறார்களாம். நிக் ஜோனாஸ் ஒரு நிலையில் வெறுத்துப் போகவே விவாகரத்து முடிவை எடுத்துள்ளதாகவும், விரைவில் இது குறித்து அறிவிப்பார் என்றும் கூறியுள்ளது.

ஆனால் இதுவரை இந்த விவாகரத்து செய்தி குறித்து நிக் ஜோனாஸ் மற்றும் பிரியங்கா சோப்ரா தரப்பிடம் இருந்து, எந்த ஒரு உறுதியான தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.