Priyanka Chopra back to tamil after a long time
தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாலிவுட் கனவுக் கன்னி பிரியங்கா சோப்ரா. "உள்ளத்தை கிள்ளாதே கில்லி விட்டு செல்லாதே காயத்தில் முத்தம் வையப்பா" என்றி ஹிட் பாடலால் ரசிகர்களை கிரங்கடித்த பிரியங்கா, அத்தோடு தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டு வடஇந்தியா பக்கம் சென்றுவிட்டார்.
உள்ளத்தைக் கிள்ளி விட்டு காயம் ஏற்படுத்திச் சென்றுவிட்டாரே என தமிழ் ரசிகர்கள் ஏங்கித் தவித்தனர். தமிழ் திரையுலகம் அளித்த ராசி பாலிவுட்டில் கொடி கட்டிப் பறந்த அவர், தீபிகா படுகோனேக்குப் பிறகு ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
பிரபல மல்யுத்த வீரர் ராக் என அறியப்படும் டுவைன் ஜான்சனோடு இவர் மல்லுக்கட்டிய "BAYWATCH" திரைபப்படம் அமெரிக்காவில் கடந்த 13 ஆம் தேதி வெளியானது. ஏப்ப சப்பையாக இல்லாமல் வசூலிலும் தனி முத்திரை படைத்துள்ளது. பேவாட்ச் திரைப்படம். பாக்ஸ் ஆபிஸ் மோஜோ பட்டியல் படி இத்திரைப்படம் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் 28 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலாக ஈட்டியுள்ளது.
ஆக்சன் காம்போவாக கட்டம் கட்டி கலக்கும் பேவாட்ச் தமிழில் டப்பாகி தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. ஹியூபாக்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளது.
அமெரிக்காவில் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட "பேவாட்ச் " திரைப்படம் ஹாலிவுட்டில் பிரியங்காவுக்கு ஏற்றத்தை அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.......
பேவாட்ச் டிப்ஸ்
பேவாட்ச் திரைப்படத்தில் நடிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த பிரியங்கா சோப்ரா கடற்கரையில் டூ பீஸூடன் குளித்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. பேவாட்ச் எனப்படும் ஒரு பானை சோற்றுக்கு பிரியங்காவின் டூ பீஸ் எனப்படும் ஒரு சோறு போதுமே... கிளம்புங்க மக்கா....
