வெள்ளித்திரையில் வலம் வரும் நட்சத்திரங்களை விட சின்னத்திரையில் தோன்றும் நட்சத்திரங்கள் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமானவர்கள் என்றே கூறலாம்.

அந்த வகையில், விஜய் டிவி தொகுப்பாளினிகளில் டிடியை தொடர்ந்து, ரசிகர்களை தன்னுடைய காமெடியான பேச்சால் அதிகம் கவர்ந்தவர் பிரியங்கா. திருமணத்தை தொடந்தும் வழக்கம் போல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் உள்ளார். எனவே இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் பிரியங்கா, பிரவீன் என்பவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் கடந்த ஓரிரு தினத்திற்கு முன் தங்களுடைய  மூன்றாவது திருமண ஆண்டை கொண்டாடினர். இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா. 

இதை அறிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்து மழையால் பிரியங்காவை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டனர்.