*    மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு வசனம் எழுதுபவர், எழுத்தாளர் ஜெயமோகன். இப்படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய ‘ஃபர்ஸ்ட் லுக்’ ஒன்று நேற்று வெளியானது. இந்த நிலையில் ஜெயமோகனை உரசி சிலர் சமூக வலைதளங்களில் எழுதி வருகின்றனர். மேலும் ‘ராவணன்’ படக்கதையை சிதைத்தது போல் இந்த நாவலையும் மணி சிதைக்காமல் விடமாட்டார்! என்றும் சிலர் விமர்சித்து வருகின்றனர்.

*    பாகுபலி 2வின் மெகா ஹிட்டுக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் தேஜா நடிக்கும் ‘ஆர் ஆர் ஆர்’ படத்தை துவக்கினார் ராஜமவுலி. இடையில் கொஞ்சம் தொய்வடைந்த இப்படம் இந்தாண்டில் வருமா? என டவுட்டானது. ஆனால் சமீபத்தில் வெளியான ஒரு விளம்பரம், இப்படம் இந்தாண்டில் வெளியாவதை உறுதி செய்துள்ளது. 

*    அசுரன் படம் அகில இந்திய அளவில் பிரபலமானதும்,  இதன் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ் நடிப்பதும் தெரிந்த விஷயம். ஆனால் அதில் ஜோடியாக ஸ்ரேயா நடிக்க இருந்தார். ஆனால் சமீபத்தில் அவரை மாற்றிவிட்டு பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளனர். 
ஆக முத்தழகு சீசன் 2 ஆரம்பமாகிறது. 

*    சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்தான் இசை. அதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் படத்துக்கும் ஜி.வி.பி.யேதான் இசை. அப்படம் இசையமைப்பாளரின் 75வது படம். வெற்றி - பிரகாஷ் கூட்டணி செம்ம ஹிட் கூட்டணி என பெயர் வாங்கிவிட்டது. 

*    பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் ‘மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம்’ படம் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்களுடன் தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படம் மார்ச்சில் வெளியாகிறது. மலையாள பட உலகில் ஹை பட்ஜெட்டில் உருவாகும் படமிது என்பதுதான் ஹைலைட்!