*  விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவரது உயிர் நண்பன் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். முன்பெல்லாம் ஆர்யாவை வில்லனாக கேட்டால் நடிக்க மறுப்பார். ஆனால் இப்போது கதை, தன் கேரக்டர் பிடித்திருந்தால் ஓ.கே. சொல்கிறார். காரணம், எல்லாம் மனைவி சாயிஷாவின் அட்வைஸ்தானாம். ‘நடிக்க வந்த பிறகு பாசிடீவ் ரோல், நெகடீவ் ரோல்னு பார்க்காதே! ரஜினி, அஜித், விஜய் எல்லாருமே நெகடீவ் ரோல்லேயும் நடிச்சு ஜெயிச்சவங்கதான்.’ என்று செம்மயாய் பாடம் எடுத்திருக்கிறதாம் பொண்ணு. (பாயிண்ட்ட பிடிச்சுட்ட  சாயி)

*  தம்பி தனுஷுக்காக அண்ணன் செல்வராகவன் வைத்திருந்த ‘டாக்டர்ஸ்’ டைட்டிலை சிவகார்த்திகேயனுக்காக எடுத்து ‘டாக்டர்’ என்று பஞ்சாயத்து வராமல் நேக்காக மாற்றிக் கொண்டுள்ளனர். ஏற்கனவே தனுஷ் - சிவா உரசல், மோதல் பஞ்சாயத்து உச்சத்துக்கு உள்ள நிலையில் இது எக்ஸ்ட்ரா பெட்ரோலை ஊற்றிவிட்டது. இந்நிலையில் சிவகார்த்தியும், அனிருத்தும் நெருங்கிய தோழர்கள். ஆனால் அனிருத்தை மீண்டும் தன் படத்துக்கு இசையமைக்க புக் செய்திருக்கும் தனுஷ், சிவகார்த்தியின் படத்தில் இனி இசையமைக்க கூடாது என அனிருத்துக்கு தடை போட்டுள்ளாராம். 
(இன்னும் எத்தனை நாளைக்கோ?)

*  விஜய்யின் டை ஹார்டு விசிறிதான் பாக்யராஜின் மகன் சாந்தனு. சர்கார் படம் ‘கதை திருட்டு’ விவகாரத்தில் சிக்கியபோது, பாக்யராஜ் வழங்கிய தீர்ப்பினால் விஜய் படம் சற்றே அசிங்கப்பட்டதுதான். அப்போது தன் அப்பாவென்றும் பாராமல் பாக்யராஜிடம் சண்டை போட்டார் சாந்தனு. இந்த நிலையில் இதையெல்லாம் மனசில் வைக்காமல் சாந்தனுவுக்கு தன் புதிய படத்தில் வாய்ப்பு வழங்கியுள்ளார் விஜய். பாக்யராஜும் ஹேப்பியாம். 
(எது எப்படி போனா எனக்கென்ன!? வாய்ப்பு கெடச்சா சரி)

*   லாஜிக்கே இல்லாத மேஜிக்காக உருவாகி ரிலீஸாகி இருக்கும் தபாங் 3 படத்தின் கமர்ஷியல் ஹிட்டின் மூலம் மீண்டும் பாலிவுட்டில் பிரபுதேவாவின் எரா துவங்கியிருக்கிறது! என்கிறார்கள். அநேகமாக மீண்டும் சல்மான், அக்‌ஷய் ஆகியோருடன் ஒரு அதிரடி ரவுண்டு வர இருக்கிறார் பிரபு. 
(அப்ப  தெறி, பிகில் எல்லாம் ரீமேக் ஆகுமுன்னு சொல்லுங்க)

*   கங்கணா ரணவத் ஜெயலலிதாவாக நடிக்கும் ‘தலைவி’ படத்தில், சசிகலா கேரக்டருக்கு யாரையெல்லாமோ ட்ரை பண்ணிப்பார்த்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ஆனால் கடைசியில் ப்ரியாமணி டிக் ஆனார். பொண்ணு பாரபட்சமில்லாமல் இந்த ப்ராஜெக்டில் டெடிகேஷன் காட்டுகிறாராம். நடிப்பில் வெளுக்கிறாராம். சசியே அசந்து போவார்! என்கிறார்கள். (ஆக முத்தழகுக்கு இன்னொரு தேசிய விருது பார்சேல்ல்ல்)