priyadharshini going to direct the new movie the named sakthi
நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி ஹை-பை லுக்குடன் சும்மா கம்பீரமாக நடிக்க உள்ள திரைப்படம் சக்தி
பஸ்ட்லுக் போஸ்டர் மூலமே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள வரலக்ஷ்மியை வைத்து படம் எடுப்பவர் யார் தெரியுமா ?
பல வெற்றி படங்களை இயக்கி தனக்குன்னு ஒரு பாணியை வைத்துக்கொண்டு இயக்கத்தில்கலக்கி வரும் இயக்குனர் மிஸ்கினின் உதவி இயக்குனர் பிரியதர்ஷினி தான் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம் உண்மை...பெரிய பெரிய இயக்குனர்களே வாய்ப்பு கிடைக்காமல் சற்று சரிந்து நிற்கும் போது, சினி உலகமே மூக்கின் மீது விரல் வைத்து பார்க்கும் அளவிற்கு, அனைவரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியதர்ஷினி
அதுவும் கூட சிறிய வயதில் என்றால் பாருங்களேன்....பிரியதர்ஷினியின் இந்த திறமை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது
பஸ்ட்லுக் போஸ்டரிலேயே தன் கம்பீரலுக் கொடுத்த வரலக்ஷ்மி ஒரு பக்கம் இருக்க,மற்றொரு புறம்,இந்த படம் குறித்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வாரா பிரியதர்ஷினி என்றஆவலும் எழுந்துள்ளது
இந்த படத்தை பற்றி பிரியதர்ஷினி என்ன சொல்லி இருக்கிறார் என்றால்,இந்த படம் மற்ற படங்களை போன்று பெண்களுக்குறிய கதையாக இருக்காது. முற்றிலும் மாறுபட்டு காணப்படும் என்றும், இது முற்றிலும் ஆக்ஷஷன் திரில்லர் ஆக இருக்கும் என தெரிவித்து மேலும் ஆர்வத்தை கூட்டியுள்ளார் பிரியதர்ஷினி
