மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், தற்போது பாடகியாக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.

'ஒரு அடார் லவ்' என்கிற மலையாள படத்தில், கண்ணடிக்கும் காட்சியில் நடித்து, ஒரே நாளில் மிகவும் பிரபலமானவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ஆனால் இந்த படம் வெளியாகி சரியாக ஓடாததால் தற்போது இவருடைய மார்க்கெட் டல்லடித்து விட்டது.

ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற முனைப்பு காட்டி வரும் பிரியா வாரியர், பாலிவுட் திரையுலகில் ஒரு படத்தில் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் இவருக்கு திரையுலகில் மறுபிரவேசம் ஆக அமையும் என்றும் நம்புகிறார். மேலும் மலையாளத்தில் பைனல் என்ற படத்தின் மூலம் இவர் பாடகியாக தற்போது அறிமுகமாகிறார்.  இவரின் பாடகி அவதாரத்தை சற்றும் எதிர்பாராத ரசிகர்கள் செம ஷாக் ஆகியுள்ளனர்.