priya warrier missed the chance to act with actor surya
ஒரே ஒரு கண்ணசைவு மூலம் தென்னிந்திய திரையுலகத்துக்கே பரிச்சயம் ஆகிவிட்டார் பிரியா வாரியர். அந்த கண்ணசைவு பாடல் இடம்பெற்ற 'ஒரு அடார் லவ்' படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என பிரியா வாரியருக்கு வாய்ப்புகள் அலைமோதுகின்றன. ஆனால் அவரால் எந்த புதிய படத்திலும் கமிட் ஆக முடியவில்லை.

மேலும் ஒரு அடார் லவ் திரைப்படம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் வேறு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க கூடாதம். அதுமட்டுமில்லாமல் தான் கலூரியில் பயன்று வருவதால் இப்போதைக்கு எந்த படத்திலும் கமிட் ஆக முடியவில்லை என அவர் தெரிவித்து உள்ளாராம்.

மேலும் இது போன்ற பல மொழிகளில் பல பட வாய்ப்புகள் வந்தாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இவ்வாறு வந்த பட வாய்ப்புகளில் நடிகர் சூர்யா நடிக்கும் ஒரு படத்திலும் பிரியா வாரியார் வாய்ப்பை இழந்து விட்டாராம்.
இல்லை என்றால், நடிகர் சூர்யாவுடன் பிரியா வாரியார் நடித்திருப்பார் என கூறப்படுகிறது.
