மாணிக்ய மலராய பூவி என்ற பாடலில் கண்ணசைவுகள் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதைக் கொள்ளையடித்தவர் பிரியா வாரியர். ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்கள் மத்தியில் இந்தக் காட்சி பிரபலமானதுடன், தற்போது வரையிலும் பேசப்பட்டு வருகிறது. இந்த காட்சியை மட்டுமே வைத்து உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளமீம்சுகளுக்கும் அளவே இல்லை. அந்த அளவுக்கு பிரபலமான இக்காட்சி இடம்பெற்ற படம் ஒரு அடார் லவ். இயக்குனர் ஒமர் லூலூ இப்படத்தை இயக்கியுள்ளார். 
 
தற்போது இப்படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் அந்தச் சாதனையானது படக்குழுவினரை அதிர்ச்சியடையச் செய்த சாதனையாக உள்ளது. என்ன காரணம் என்று பார்த்தால் பிரியா வாரியரின் இந்த பாடலுக்கு யூடியூப்பில் லைக்கை விட டிஸ்லைக் அதிகமாக உள்ளதே ஆகும். ஃபிரீக் பெண்ணே என்ற அந்தப் பாடல் கடந்த 20ஆம் தேதி யூடியூப்பில் வெளியானது. தற்போது வரை இப்பாடல் 76 லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. 

யூடியூப்பில் நம்பர் ஒன் டிரெண்டிங்கில் பாடல் உள்ளது. ஆனால் இதில் வினோதமான செய்தி என்னவென்றால் பாடலை லைக் செய்தவர்கள் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேர். ஆனால் டிஸ்லைக் செய்தவர்கள் 5 லட்சத்து 80 ஆயிரம் பேர். அதாவது இரண்டிற்குமான வித்தியாசம் சுமார் 4 லட்சமாக உள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஈவு, இரக்கமின்றி விமர்சிக்கப்பட்டு வருகிறது. இப்பாடலில் பிரியா வாரியரின் தோற்றத்தையும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

 
 
ஒரே பாடலில் ஓஹோவென பிரபலமான பிரியா வாரியரால், ஒரு அடார் லவ் படக்குழு மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் இரண்டாவது பாடலுக்கு இதுபோன்ற மோசமான விமர்சனத்தைப் பெற்றுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.