priya variyer used in traffic awarness

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற மாணிக்க மலராய பூவி என்கிற ஒரே பாடலில் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் பிரியா வாரியர். சமூக வலைத்தளத்தில் இவருடைய கண் அசைவு சக்கப்போடு போட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தற்போது இவருடைய கண்ணசைவை வைத்து போலீசார் சாலை விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 

பிரியா வாரியரின் கண் அசைவு படத்தை போட்டு அதன் அருகில், கண் அசைவுகளால் விபத்துக்கள் நேரலாம் என்றும் கவனச் சிதறலுக்கு ஆளாகாமல் முழு கவனத்துடன் வாகனத்தை ஒட்டுங்கள் என்று வாசகம் எழுதியுள்ளனர். இந்த விளம்பரம் வைரலாக பரவி வருவதோடு. வித்தியாசமாக விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

மக்களுக்கு நேரடியாக ஒரு கருத்தை சொல்வதை விட திரை பிரபலங்களின் புகழ் பெற்ற வாசனங்கள், ஸ்டைல்களில் செல்லும் பொது வேகமாக மக்களை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.