priya variyar love failure her post indicates
நிஜ வாழ்கையில் காதல் தோல்வி...! உறைந்துபோன பிரியா வாரியார்..?
ஒரு அடார் லவ் என்ற படத்தில் நடித்து வரும் பிரியா வாரியார்,லவ்வர்ஸ் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஒரு கண்ணசைவு வீடியோ இந்தியா முழுக்க ஓவர் நைட்டில் பரவியது.
சமூக வலைத்தளங்களில் அதிக வரவேற்பு பெற்ற பிரியா வாரியார் வீடியோ அப்போதைக்கு மிகவும் பிரபலம்..
இதனை தொடர்ந்து ஒரே நாளில் அனைவர் மத்தியிலும் பிரபலமான பிரியா வாரியார் உண்மையில் காதல் தோல்வி அடைந்தவரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக காதல் தோல்வி குறித்து பல வசனங்களையும்,வீடியோவையும் பகிர்ந்து வருகிறார்.
தற்போது பி.காம் முதலாம் ஆண்டு படித்து வரும் பிரியா வாரியார் காதல் தோல்வியால் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் காதல் தோல்வி பற்றிய படங்களையும் அவர் அடிக்கடி பதிவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதன் மூலம் பிரியா வாரியார் அவருடைய நிஜ வாழ்கையில் காதல் தோல்வி அடைந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
