இளையதளபதி விஜய், நடிகை பிரியா பவானி சங்கருக்கு அதிகாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தியுள்ளார்.   விஜய் அண்மையில் மேயாத மான் படத்தின் சில காட்சிகளை பார்த்துள்ளார். அதில் பிரியா பவானி சங்கரின் நடிப்பை பார்த்து விஜய் பாராட்டியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தனது நண்பர்கள் மற்றும் சர்கார் படக்குழுவினரிடமும் பிரியா பவானி சங்கர் பற்றி பேசியுள்ளார். மேயாத மான் படத்தில் பிரியா பவானி சங்கர் நன்றாக நடித்துள்ளார் என்றும் விஜய் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார். மேலும் பிரியா பவானி சங்கர் தற்போது நடித்து வரும் படங்கள் குறித்தும் விஜய் விசாரித்துள்ளார். பிரியா பவானி சங்கரை நடிகர் விஜய் பாராட்டியது மற்றும் அவர் குறித்து விசாரித்த செய்தி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதனை  நேற்று (04-07-2018) அதிகாலை  பிரியா பவானி சங்கர் பார்த்துள்ளார். ஆனால் முதலில் இது ஏதேனும் வதந்தியாக இருக்கும் என்று பிரியா பவானி சங்கர் நினைத்துள்ளார். இருந்தாலும் தொலைக்காட்சி செய்தியில் விஜய் தன்னை பாராட்டியதாக செய்தி வந்ததாகவும் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளார்.   எனினும் விஜய் தன்னை உண்மையிலேயே பாராட்டினாரா? என்று தெரிந்து கொள்ள தனது பி.ஆர்.ஓ மூலமாக விசாரித்துள்ளார். அப்போது விஜய் உண்மையில் தன்னை பாராட்டிய விஷயம் பிரியா பவானி சங்கருக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக விஜய் தன்னை பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், நம்ப முடியவில்லை என்றும் கூறி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 
இதனிடையே நடிகர் விஜய் யாரையும் அவ்வளவு சீக்கிரத்தில் பாராட்ட மாட்டார் என்றும், அப்படியே அவர் பாராட்டினால் நிச்சயம் தனது படத்தில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வகையில் தனது அடுத்த படத்தில் பிரியா பவானி சங்கருக்கு விஜய் வாய்ப்பு கொடுக்க பிரகாஷமான வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது ஏனென்றால் விஜய் தற்போது சர்கார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். ஏற்கனவே பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜயுடன் நடித்துவிட்டார். மேலும் தற்போது  முன்னணியில் உள்ள காஜல் அகர்வால், சமந்தா, நயன்தாரா உள்ளிட்ட அனைத்து நடிகைகளுடனும் விஜய் ஜோடியாக நடித்துவிட்டார். எனவே தனது அடுத்த படத்திற்கு புதிய ஜோடியை விஜய் தேடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரியா பவானி சங்கரை பாராட்டியுள்ளதால் தனது அடுத்த படத்தில் விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வாய்ப்பு உள்ளது.