பிரியா பவானி சங்கர் சமீபத்திய சூப்பர் கூல் போட்டோஸ்...

முன்னதாக குடும்ப குத்து விளக்கு போல இருந்த இவர் முன்னணி நாயகியாகும் பயணத்தில் முன்னேறிவிட்ட காரணத்தால் உடையை குறைத்து விட்டார். தற்போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Priya Bhavani Shankar latest super cool photos

தொலைக்காட்சி தொகுப்பாளர், சின்னத்திரையின் நட்சத்திரமாக இருந்து ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் பிரியா பவானிசங்கர். தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு வெளியான மேயாத மான் படம் தான் இவருக்கு நாயகியாகும் வாய்ப்பை கொடுத்தது. முன்னதாக விஜய் டிவிகள் ஒளிபரப்பாகி வந்த கல்யாண முதல் காதல் வரை தொடர் மூலம்  சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருந்தார். மேயாத மான் படத்தை தொடர்ந்து இவருக்கு கடைக்குட்டி சிங்கம் மாஸ்டர், மாபியா அத்தியாயம் ஒன்று, களத்தில் சந்திப்போம், கசடதபற,  ஓ மணப்பெண்ணே, உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் நாயகியை அசத்தி வந்த இவருக்கு அருண் விஜய் உடன் ஜோடியாக யானை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குருதியாட்டம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களிலும் நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. எஸ் ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்தை தொடர்ந்தே இவருக்கு நடிகையாகும் அங்கீகாரம் அதிகரித்தது என்றே சொல்லலாம். தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக அகிலன், பொம்மை, ருத்ரன், பத்து தல, இந்தியன் 2 உள்ளிட்ட மிகப்பெரிய பட்ஜெட் படங்களிலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...இரண்டாவது குழந்தைக்கு தயாரான ஐஸ்வர்யா ராய் ?.. இதற்கு காரணம் இந்த உடை தான்...

வெப் தொடர்களையும் விட்டு வைக்காத இவர் டைம் என்ன பாஸ் உள்ளிட்ட வெப்தொடர்களிலும் நடித்துள்ளார், சின்னத்திரையிலிருந்து திரையில் ஜொலிக்கும் இவர் ஜோடி நம்பர் ஒன் சீசன் 5, சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 5 என பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார். இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களையும் கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

மேலும் செய்திகளுக்கு...சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி..பிரமாண்டமாக நடைபெறும் ஆடியோ லாஞ்ச்...

முன்னதாக வெளிநாடு சென்றிருந்த ப்ரியா பவானி சங்கர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அனைத்தையும் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வந்தார். முன்னதாக குடும்ப குத்து விளக்கு போல இருந்த இவர் முன்னணி நாயகியாகும் பயணத்தில் முன்னேறிவிட்ட காரணத்தால் உடையை குறைத்து விட்டார். தற்போது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios