Asianet News Tamil

பிரியா பவானி ஷங்கர் குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்திய திடீர் மரணம்..! நெகிழவைக்கும் பதிவு..!

தற்போது இவரது வீட்டில் நிகழ்ந்துள்ள மரணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

priya bhavani shankar grand father death emotional message
Author
Chennai, First Published May 8, 2021, 3:21 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

செய்தியாளராக வேண்டும் என்கிற கனவோடு, இன்ஜினீரிங் படித்து முடித்ததும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை துவங்கியவர் பிரியா பவானி ஷங்கர். இவரது திறமையும், அழகும் இவருக்கு சீரியல் நாயகி வாய்ப்பை பெற்று தந்தது. அரைமனதோடு இந்த வாய்ப்பை ஏற்றாலும், பின்னர் அனைவருக்கும் பிடித்த சீரியல் நாயகியாக மாறினார்.

மேலும் செய்திகள்: பார்பி டால் போல்... பளீச் அழகில் பம்பரமாய் சுற்றி... இளம் நெஞ்சங்களை சுழட்டி போட்ட லாஸ்லியா..!
 

சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதீத வரவேற்பு கிடைத்ததால், 'மேயாத மான்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகினார். முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து, மான்ஸ்டர், கடைக்குட்டி சிங்கம், இந்தியன் 2 , உள்ளிட்ட பல படங்களில் கமிட் ஆக துவங்கினார். தற்போது அம்மணியின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளது. இவருக்கென மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமும் உள்ளது.

தற்போது இவரது வீட்டில் நிகழ்ந்துள்ள மரணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "ஒரு successful business man. தனி மனுஷனா ஒன்னுமே இல்லாம வாழ்க்கைய ஆரம்பிச்சி 5 பசங்கள அமோகமா படிக்க வச்சி 10 பேரப் பசங்கள்ல 8 பேர டாக்டராக்கி அவங்களையும் டாக்டர்களுக்கு கட்டிக்கொடுத்து தான் உருவாக்கின, ஒரு சிறிய மருத்துவர்கள் சூழ் உலகத்துல பெருமையா வாழ்ந்தவர்.

மேலும் செய்திகள்: என் உடலில் பார்ட்டி வைத்துக்கொண்டிருக்கிறது கொரோனா... ஷாக் கொடுத்த கங்கனா ரனாவத்!
 

நான் தாத்தாவோட favorite லாம் இல்ல. In fact odd person அவுட்டுன்னு கூட வச்சிக்கலாம். சின்னதுலேர்ந்தே ‘என்னமா இவ்ளோ துஷ்டத்தனம் பண்ணுது இது’ category நாம. 10வது வரை School vacation விட்டா நாய் குட்டி மாதிரி எங்க 8 பேரையும் தாத்தா வீட்ல விட்ருவாங்க. கட்டில்கள், ஊஞ்சல்கள்,கைகள்,கால்கள்,எங்க மண்டைகள்னு உடையாத item எதுவும் இல்ல. கத்தி குத்து முயற்சி, ஆள் கடத்தல், கொலை முயற்சின்னு juvenile குற்றங்களும் இதில் அடக்கம். பட்டம், பம்பரம், கிட்டிப்புள், உண்டிகோல் தொடங்கி பரண்-ல தொங்கர வரைக்கும் அனைத்தும் கற்றது தாத்தா வீட்ல தான்.

மேலும் செய்திகள்: கொரோனா மற்றும் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து உயிர் பிழைத்த நடிகர் அருண் பாண்டியன்! அதிர்ச்சி தகவல்..!
 

ஆனா ராத்திரி தாத்தா வீட்டுக்கு வந்துட்டா முழு discipline தான். உள்ள வரும் போதே அவரோட முதல் வேலை tv இழுத்து மூடி பூட்டு போடறது தான். அப்போலாம் அந்த Door வச்ச tv.. Pepsi ungal choice மட்டும் பாத்துக்கறேன் தாத்தான்னு கெஞ்சினாக்கூட விட மாட்டார். இப்படியாக இளமை புதுமை, நீங்கள் கேட்ட பாடல், திரை விமர்சனம், நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்-னு நாங்க இழந்த show-கள் ஏராளம். எங்க பாட்டி தான் எங்களுக்கு rockstar. தாத்தா பயப்படற, பேச்ச கேக்கற ஒரே ஆளு பாட்டி தான். Full swag thug life lady தான்.

மேலும் செய்திகள்: மணம் நிகழ்வதைவிட... குணம் நிகழ்வதே மங்கலமல்லவா? கொரோனா நோயாளிகளுக்கு உதவ காத்திருக்கும் வைரமுத்து!
 

இதெல்லாம் தினமும் நியாபகத்துல இருக்கற விஷயம் இல்ல. நேத்து இறந்து போய் அசையாம இருந்த தாத்தாவ பார்க்கும்போது மூளையின் ஓரத்துல எங்கயோ எப்பயோ புதஞ்சி மறந்துபோன ஓரு கோடி நியாபகம். டிவி சினிமாலாம் பார்க்கவே கூடாதுன்னு சொன்ன தாத்தாவோட, medical college போகாத ஒரே பேத்தி நான். போன வாரம் கடைசியா அவர்கிட்ட பேசிட்டு இருந்தப்போ, உன்னை உங்க அப்பா தைரியமான பொண்னா வளர்த்துருக்காரு. என் பொண்னை நீ நல்லா பாத்துப்பன்னு தெரியும் சொன்னார். எங்க தாத்தா எங்களுக்கு எந்த சொத்தும் எழுதிட்டுப் போகல, ஆனா என்னோட முதல் சம்பளத்துல 1950ல அன்றைய காசு 24 ரூபாக்கு என் அம்மாக்கு வாங்கின தோடு் இது, இனி நீ வச்சுக்கோன்னு கொடுத்தார் which is more precious than anything we could ever இமாஜினே. For once I felt valued and acknowledged by that old man. உங்க அம்மாவோட தோடையும் உங்க பொண்னையும் மாப்ளையும் என் உயிர விட பத்திரமா பாத்துப்பேன் தாத்தா. சந்தோஷமா போய்ட்டு வாங்க என கூறியுள்ளார். இவரது இந்த பதிவு பார்வைகள் நெஞ்சங்களையே உருக வைக்கும் விதத்தில் உள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios