கொரோனா மற்றும் மிகப்பெரிய பிரச்சனையில் இருந்து உயிர் பிழைத்த நடிகர் அருண் பாண்டியன்! அதிர்ச்சி தகவல்..!

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய கோளாறில் இருந்தும் இவர் மீண்டுள்ளதாக இவரது மகள்கள் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளனர்.
 

actor arun pandian affected corona and heart problem

பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இதய கோளாறில் இருந்தும் இவர் மீண்டுள்ளதாக இவரது மகள்கள் சமூக வலைதளத்தின் மூலம் தெரிவித்துள்ளனர்.

90 களில் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வலம் வந்தவர் அருண் பாண்டியன். மேலும் பட படங்களை தயாரித்தும் உள்ளார். சமீபத்தில் அப்பா - மகள்  இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதையாக உருவான 'அன்பிற்கினியால்' படத்தில் மகள் கீர்த்தி பாண்டியனுடன் நீண்ட இடைவெளிக்கு பின் நடித்திருந்தார்.  அற்புதமான கதைக்களத்தோடு இந்த படத்தை இயக்கி இருந்தார் கோகுல். அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் ஒவ்வொன்றுமே மாறுபட்ட வகையைச் சேர்ந்தவை. அந்த வரிசையில் இந்தப் புதிய படத்தின் கதையும், களமும், காட்சிகளும் புதிய கோணத்தில் ரசிகர்களை கவர்ந்தது.

actor arun pandian affected corona and heart problem

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அருண் பாண்டியன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது இவரது இதய குழாயில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உடனடியாக அதற்கான சிகிச்சைகளையும் மருத்துவர்கள் மேற்கொண்டனர். சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் தற்போது அவர் பூரண நலத்துடன் உள்ளகாக அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.

actor arun pandian affected corona and heart problem

இதுகுறித்து, அருண்பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது...  "எங்கள் தந்தைக்கு கோவிட் தொற்று மட்டுமின்றி இதயத்திலும் பிரச்சனை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, சரியான நேரத்தில் அந்த பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விட்டது. தற்போது தங்களது தந்தை நலமுடன் இருப்பதாகவும் பதிவு செய்துள்ளனர். இதை தொடர்ந்து அருண் பாண்டியன் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios