இன்று இயக்குநர் ராதாமோகனின் பிறந்தநாள். எனவே படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி, ராதாமோகனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  இதில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பிரபல இயக்குநர் ராதாமோகன் கடந்த ஆண்டு "காற்றின் மொழி" படத்தை இயக்கினார். ஜோதிகா நடித்த அந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி வருகிறார் ராதாமோகன். "பொம்மை" என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக டி.வி.தொகுப்பாளினியாக இருந்து நடிகை அவதாரம் எடுத்த ப்ரியா பவானிசங்கர் நடித்து வருகிறார். 

ரொமாண்டிக் சைக்கோ திரில்லர் படமான இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை ஏஞ்சல்ஸ் ஸ்டியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Scroll to load tweet…

இன்று இயக்குநர் ராதாமோகனின் பிறந்தநாள். எனவே படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி, ராதாமோகனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பிறந்தநாள் கொண்டாடத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ப்ரியா பவானி சங்கர் உள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது.