தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், திடீரென சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதன் பின் நடிப்பையே முழுநேர தொழிலாக செய்ய தொடங்கிய அவருக்கு, வைபவ் ஜோடியாக, மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகி வேடம் கிடைத்தது.

இதில், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அவருக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. சமீபத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில்,  கார்த்தி ஜோடியாக, கடைக்குட்டி சிங்கம் படத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த படம் பல தரப்பிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், புரஃபைல் தற்போது மாத்தியுள்ளார். இந்த புரஃபைல் படத்தில்,டிரான்ஸ்பரன்ட்டான ஆடை அணிந்தபடி அவர் இருக்கிறார். டிரான்ஸ்பரன்ட் ஆடை என்பதால் பிரியா பவானி சங்கரின் இடை மற்றும் தொப்புள் தெரிகிறது.  

குடும்ப பாங்கான ஹீரோயின் என நினைத்து வந்த நிலையில், அவர் இப்படி ஒரு ஆடை அணிந்தது ஏற்கத்தக்கது அல்ல என்று,இன்ஸ்டாகிராமில் பலர் பொங்க தொடங்கியுள்ளனர். இதுபற்றி ரசிகர் ஒருவர், ‘’எனது கனவுக் கன்னியாக உன்னை நான் நினைத்திருந்தேன். நிறைய நம்பியிருந்த நிலையில், நீ இப்படி செய்வாய் என நினைக்கவில்லை. இனி நீ என் கனவுக்கன்னி இல்லை,’’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பிரியா பவானி சங்கர் உடனடியாக பதில் அளித்துள்ளார். அதில், ‘’உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி. ஒரு ஆணின் கனவுக்கன்னியாக வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. உங்கள் விருப்பப்படி எல்லாம் என்னால் வாழ முடியாது. ஆடை சுதந்திரம் எனது உரிமை. உங்கள் விருப்பதிற்கு ஏற்ற கனவுக்கன்னியை தேடிக் கொள்ளுங்கள் ,’’ என்று பிரியா பவானி சங்கர் பதிலடி தந்துள்ளார்.

இதுமட்டுமின்றி, ‘’ஒருவர் புரஃபைல் வைத்தால், அதனை ஜூம் செய்து, என்ன தெரிகிறது என்று பார்த்துவிட்டு, பின்னர் எதற்கு இப்படி பேசுகிறீர்கள். முதலில் நீங்கள் ஒழுக்கமாக இருக்க பழகி கொள்ளுங்கள்,’’ என்றும் பிரியா பவானி சங்கர் குறிப்பிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர். ஒரு பெண்ணான நீங்கள் காட்டும் போது, ஆணான நாங்கள் பார்க்ககூடாதா? என்பது தான் அந்த கேள்வியாக உள்ளது.

 இதனிடையே தன்னை குடும்ப பாங்கான நடிகை என நினைத்து வாய்ப்புகள் பெரிய அளவில் தரப்படுவதில்லை என்ற நிலையை மாற்றவே நடிகை பிரியா பவானி சங்கர் கவர்ச்சியான உடையை அணிந்து போஸ் கொடுத்துள்ளதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.