கடந்த சில வாரங்களாக சமூக வலைதளத்தை கலக்கி வருகிறது பேஸ் ஆப் சேலஞ்சு.  இதில் பிரபலங்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும், தங்களுடைய புகைப்படத்தை பில்டர் செய்து வயதான தோற்றத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், பாலிவுட் நடிகர், நடிகைகள் மற்றும் கோலிவுட் நடிகர் நடிகைகள் என அனைவரும் இந்த சேலஞ்சில் ஈடுபட்டு வருகிறார்கள். ஓரிரு தினத்திற்கு முன் கூட நடிகை குஷ்பு வெளியிட்ட அவருடைய வயதான புகைப்படம் அனைவராலும் வைரலாக பேசப்பட்டது.

அவரை தொடர்ந்து, தற்போது, வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை பிரியா பவானி ஷங்கர், தன்னுடைய வயதான தோற்றத்துடன் கூடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வயதான தோற்றத்திலும் இவர் மிகவும் கியூட்டாக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.