நடிகர் விக்ரம் நடிப்பில், கடந்த வாரம் 'கடாரம் கொண்டான்' திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்ரம் நடிக்கவுள்ள படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே நடிகர் விக்ரம், தமிழில் 'டிமான்டி காலனி' மற்றும் 'இமைக்கா நொடிகள்' போன்ற படங்களை இயக்கி, வெற்றி இயக்குனராக அனைவராலும் அறியப்பட்ட, அஜய் ஞானமுத்து இயக்கத்தில், விக்ரம் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக, நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடிகை பிரியா பவானி சங்கர், இந்தியன் 2 படத்தில் சமீபத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.  

மேலும் ஜீவா, அருள்நிதி, அதர்வா, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க உள்ளதாகவும் லலித்குமார் மற்றும் வைகாம் 18 நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.