படப்பிடிப்பு துவங்க இன்னும் சரியாக இரண்டே நாட்கள் உள்ள நிலையில் விக்ரம் 9 கெட்டப்களில் நடிக்கவுள்ள ’விக்ரம் 58’படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக படக்குழு வட்டாரங்கள் பதட்டத்துடன் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக பிரியா மீது அப்படத் தயாரிப்பாளர் நடிகர் சங்கத்தில் விரைவில் புகார் கொடுக்கக்கூடும் என்று தெரிகிறது.

‘டிமாண்டி காலணி’,’இமைக்கா நொடிகள்’ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து மூன்றாவதாக இயக்க உள்ள படத்துக்கு ‘விக்ரம் 58’என்று தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது. க்ரைம் த்ரில்லர் வகையறா படமான இதில் விக்ரம் மொத்தம் 9 கெட் அப்களில் நடிப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் ஒப்பந்தமாகியிருந்தார்.

இந்நிலையில் ‘மான்ஸ்டர்’படம் ஹிட் ஆனதைத் தொடர்ந்து பிரியா பவானிக்கு படங்கள் குவியத் துவங்கவே கமல் ஷங்கர் காம்பினேஷனின் ‘இந்தியன் 2’ துவங்கி லேட்டஸ்டாக மிக சமீபத்தில் மீண்டும் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஒரு படம் என ஐந்தாறு படங்களில் அட்வான்ஸ் வாங்கிப்போட்டார். தற்போது அவர் ‘இந்தியன் 2’படப்பிடிப்பில் இருப்பதால் ‘விக்ரம் 58’படத்துக்கு முதல் ஷெட்யூலுக்கே ஒழுங்காக கால்ஷீட் தரமுடியவில்லை. இது இரு தரப்புக்கும் மனக்கசப்பை ஏற்படுத்தவே தான் வாங்கிய அட்வான்ஸை திரும்பத்தர விரும்புவதாக ப்ரியா தரப்பில் கூறப்பட்டுள்ளது. நாளை மறுநாள் அக்டோபர் 4ம் தேதியன்று படப்பிடிப்பு துவங்கவிருந்த நிலையில் ப்ரியா திடீரென வெளிநடப்பு செய்திருப்பது படப்பிடிப்புக் குழுவினரை டென்சன் ஆக்கியிருக்கிறது.