priya bavani pair with karthi

கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் பிரியா பவானி. இவர் நடித்து தீபாவளியன்று வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மெர்சல் படத்தின் வெற்றியால் அனைவராலும் கவனிக்கப்படா விட்டாலும். இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் படக்குழுவினரைத் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தற்போது இந்தப் படத்தைத் தொடர்ந்து, நடிகர் கார்த்தி, இயக்குனர் 'பாண்டிராஜ்' இயக்கத்தில் நடிக்க உள்ள திரைப்படத்தில் பிரியா பவானியை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதே போல் இதே படத்தில் 'வனமகன்' படத்தில் கதாநாயகியாக நடித்த 'சாயிஷாவிடமும்' படக்குழுவினர் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனராம். இந்தப் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க 'ப்ரேமம்' படத்தில் நடித்த அனுப்பாம பரமேஸ்வரன் கமிட் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கார்த்தி இயக்குனர் வினோத் இயக்கத்தில் ' தீரன் அத்தியாயம் ஒன்று' படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் 'பாண்டிராஜ்' இயக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.