நடிகை பிரியா ஆனந்த் கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் நடித்து வருகிறார் , அவர் நடித்த தமிழ் படங்களில் முக்கியமானவை சிவகார்த்திகேயனுடன் நடித்த எதிர்நீச்சல், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அரிமா நம்பி, வை ராஜா வை என பல படங்களில் நடித்திருக்கிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் இவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், மீண்டும் ஒரு சகோதரரை நான் சாலை விபத்தில் இழந்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் இல்லாத ஒரு வாழ்க்கையை தன்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று டுவிட் செய்துள்ளார்.

ஆனால் தற்போது மரணம் அடைந்தவர் அவருடைய சொந்த சகோதரரா என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.

இதனால் அவருடைய நெருங்கிய நண்பர்கள் திரைபிரபலங்கள் பலர் இந்த செய்தி பற்றி அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் சிலர் தொலைபேசி வழியாகவும் விசாரித்து வருகின்றனர்.