பீஸ்ட் படம் பார்க்க ஊழியர்களுக்கு லீவும் கொடுத்து..டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்த தனியார் நிறுவனம்- இது எங்க?
Beast movie : பீஸ்ட் படத்தின் டிக்கெட் முன்பதிவும் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பீஸ்ட் படத்தின் சிறப்புக் காட்சிகள் அதிகாலை முதலே திரையிடப்பட உள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ந் தேதி ரிலீசாக உள்ளது. சுமார் ஓராண்டு இடைவெளிக்கு பின் நடிகர் விஜய்யின் படம் திரையரங்குகளில் வெளியாவதால், அப்படத்தைக் கொண்டாட ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். தமிழகத்தில் 800 முதல் 850 திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.
இப்படத்தின் டிக்கெட் முன்பதிவும் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பீஸ்ட் படத்தின் சிறப்புக் காட்சிகள் அதிகாலை முதலே திரையிடப்பட உள்ளன. சில தியேட்டர்கள் 24 மணிநேரமும் பீஸ்ட் படம் திரையிடப்பட உள்ளதாக அறிவித்துள்ளன.
பீஸ்ட் திரைப்படம் வார இறுதி நாட்களில் வெளியாகாமல் புதன்கிழமை வெளியாவதால், கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்பவர்கள் அப்படத்தை பார்ப்பதற்காக எப்படி லீவு சொல்வது என தற்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டனர். சிலரோ வெளிப்படையாகவே லீவ் கேட்டு அலப்பறை செய்து வருகின்றனர்.
ஆனால் திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்று பீஸ்ட் படம் பார்ப்பதற்காக தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் 30 ஊழியர்களுக்கு அரைநாள் விடுமுறை வழங்கி உள்ளது. அதுமட்டுமின்றி அவர்களுக்கு டிக்கெட்டும் புக் பண்ணி கொடுத்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... Beast Review : விஜய்யின் நடிப்பும்... நெல்சனின் திரைக்கதையும் அல்டிமேட் - பீஸ்ட் படத்தின் முதல் விமர்சனம் இதோ