அஜித் சிவா  நான்காவது  முறையாக  இணைந்திருக்கும்  'விஸ்வாசம்' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளிவந்து  சக்கைப்போடு போடுகிறது. அதிலும், ' அட்ச்சி தூக்கு' பாடலும் 'வேட்டி கட்டு' பாடலும் இன்னும் சமூக வலை தளங்களில் டிரெண்டில் உள்ள நிலையில் இந்த படத்தின் புதிய பாடல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர். அருண் பாரதி எழுதி அந்தோனி தாசன் குரலில் தல்லே தில்லாலே கிராமிய பாடல் தல ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்.

'நெல்லுக்கட்டு சுமக்கும் புள்ள,
நெஞ்சை கட்டி இழுக்கும் புள்ள,
சுத்திமுத்தி யாரும் இல்ல தல்லே தில்லாலே
நீ சூசகமா வாடி புள்ளே தல்லே தில்லாலே

கன்னங்கரு கருத்த மச்சான்
கைக்கு வளையல் போட்ட மச்சான்
மன்னருவா பிடிச்சிருக்கேன் தல்லே தில்லாலே
உன் பாசங்குதான் பலிக்காது தல்லே தில்லாலே

கோட்டாரு தோப்புக்குள்ள
மோட்டாரு ரூமுக்குள்ள
காட்டாறு போல வர்றேன்
தல்லே தில்லாலே
ஒரு கப்பல் ஓட்ட
நீயும் வாடி
தல்லே தில்லாலே

நல்ல கிராமிய மணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் பாடலில் காதல் காட்சிகளுக்கான சுவாரஸ்யங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  ஜூக் பாக்சில் இல்லாத இந்த பாடல், தல ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளது.