premji said sunny leyone copy me

இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் பிரேம் ஜி தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர். அதிலும் அவரது 'என்ன கொடுமை சரவணன் இது' பலரும் இன்றுவரை பயன்படுத்தும் வசனமாக இருக்கிறது. 

 இந்த நிலையில் இவர் தன்னைப் பார்த்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் காப்பி அடித்துவிட்டதாக கூறியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் நடிக்கும் 'பி.எஸ்.வி கருடவேகா' படத்தில் நடித்து வருகிறார் சன்னி லியோன். இந்தப் படத்தில் வரும் பாடல் காட்சியில் சன்னி லியோன் பிரேம்ஜி மேனரிசத்தில் ஒரு போஸ் கொடுத்திருக்கிறார். 

அந்தப் புகைப்படத்தைப் பார்த்து பிரேம்ஜி தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்து இது தன்னுடைய மேனரிசம் என குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…