பிரபல நடன இயக்குனர் ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். கலை குடும்பத்தில் பிறந்த இவர், தமிழ் சினிமாவில் நடிகையாக தான் என்ட்ரி கொடுத்தார்.  சார்லி சாப்ளின், விசில், ஸ்டைல், வானம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தந்தையை தொடர்ந்து இவரும் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் பாலா இயக்கிய தாரைதப்பட்டை படத்தில் கூட கரகாட்டத்தில் செம குத்து குத்தினார்.

இதை தொடர்ந்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக களம் கண்ட, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது ரசிகர்களின் இவருடைய சுய ரூபத்தை பார்த்து பலர் இவர் மீது கோபமாக இருந்தனர். இதன் தாக்கம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி சில காலம் வெளியிலேயே வராமல் இருந்தார்.

மேலும் சமீப காலமாக மீண்டும், சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தலைகாட்டிய இவர், நேற்றைய தினம்... காரில் இருந்தபடி கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் சிலர் இவருக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்தாலும், சிலர் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். 

 

இதற்கு முக்கிய காரணம் இவர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடந்த 2010 ஆம் ஆண்டே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தன்னுடைய அம்மாவுடன் வாழ்ந்து வருகிறார். இரண்டாவதாகவும் யாரையும் திருமணம் செய்து கொள்ளாத நிலையில் எப்படி காயத்திரி கர்ப்பமானார் என அனைவரும் குழம்பி போய் இருந்தனர்.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் தற்போது கர்ப்பத்திற்கு காரணம் என்ன என்பதை ஒரு புகைப்படம் வெளியிட்டு விளக்கி உள்ளார் காயத்திரி. தற்போது காயத்திரி ஒரு படத்தில் நடித்து வருகிறார்காம். அந்த படத்தில் இவர் நடிகர் ஹரிஷ் உத்தமனுக்கு மனைவியாக நடிக்கிறார் என கூறப்படுகிறது. மேலும் இவர் கர்ப்பமாக இருப்பது போன்றும் காட்சி இடம்பெறுகிறதாம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது என்றும் கூறி ஹரிஷ் உத்தமனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.