பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தமிழில் நடிகர் ஷாருகான் மற்றும் மனிஷா கொய்ராலா நடித்த 'உயிரே' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். 

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து 8 ஆண்டுகளுக்கு மேல், முன்னணி கதாநாயகியாக இருந்த இவர், திருமணத்திற்கு பின் தொழிலதிபராக மாறினார். 

மேலும் 'ஐபிஎல்' பஞ்சாப் அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவர் சமீபத்தில் அமெரிக்காவில் சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக, அமெரிக்க கொடி போன்ற பிரிண்ட் பதித்த பிகினி உடையுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

இந்த உடை மிகவும் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் இது... பிகினி உடையா அல்லது வேறு உடையா..? என வியப்பில் ஆழ்ந்துள்ளனர். எப்போதும் வித்தியாசமான ரசனையுடன் உடை அணிய விரும்பும் ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த பிகினி உடை புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

அந்த புகைப்படம் இதோ...