பிரபல இசையமைப்பாளர், கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி, விரைவில் திருமணம் செய்தியை அறிவிக்க உள்ளதை, அவரே தன்னுடைய ட்விட்டர் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனால் இவருக்கு தற்போது பலர் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இசை குடும்பத்து பிள்ளையான இவர், 2005 ஆண்டு கண்ட நாள் முதல் என்கிற படத்தில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, வல்லவன், சந்தோஷ் சுப்பிரமணியம், பிரியாணி, மங்காத்தா, கோவா, என பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்து, தற்போது முக்கிய காமெடி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார்.

மேலும், துணிச்சல், நெஞ்சத்தை கிள்ளாதே, தோழா, பார்ட்டி, சோம்பி, போன்ற படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். குறிப்பாக இவருடைய அண்ணன், வெங்கட் பிரபு படத்தில் கண்டிப்பாக இவரை பார்க்க முடியும்.

தமிழ் சினிமாவில், அதிக வயது கொண்ட நடிகர்களாக இருந்த ஆர்யா, விஷால் ஆகியோருக்கு திருமணம் கை கூடிய நிலையில், பிரேம்ஜிக்கு எப்போது திருமணம் என்பதே பலரது கேள்வியாக இருந்தது. பல பெட்டிகளில் கூட பிரேம்ஜி இந்த கேள்வியை மிகவும் ஜாலியாக எடுத்து கொண்டு பதில் கூறி வந்தார்.

 

இந்நிலையில், இது வரை தன்னை மொரட்டு சிங்கள் என கூறி வந்த இவர், தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், மணமகன் - மணமகள் இருக்கும் டி- ஷர்ட் போட்டு கொண்டு கேம் ஓவர் என பதிவிட்டுள்ளார். இதை வைத்து அவருக்கு பெண் கிடைத்து விட்டார். விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக அறிந்து ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறு வருகிறார்கள்.