prashanth and sneha join forth time
டோலிவுட் முன்னணி நடிகரான ராம்சரண் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ரங்கஸ்தலம்', இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் போயாபதி ஸ்ரீனு இயக்கத்தில், புதிய படத்தில் நடித்து வருகிறார். 
இந்த படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்து விட்டது. இந்த படத்திற்காக பாலிவுட் நடிகர் சல்மான்கானின் ஜிம் ட்ரைனரை அழைத்து வந்து சிக்ஸ்பேக் கெட்டப்புக்கு மாறி இருக்கிறார் ராம்சரண்.
இந்த படத்தில் ராம்சரணுடன், கியாரா அத்வானி, விவேக் ஓபராய், பிரஷாந்த், சினேகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். ஏற்கனவே பிரஷாந்த் சினேகா ஆகியோர் தமிழில் முதல் முறையாக 'விரும்புகிறேன்' படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தை இயக்குனர் சுசிகணேசன் இயக்கி இருந்தார். இந்த படத்திற்கு பிறகு, 'பொன்னர் சங்கர்', 'ஆயுதம்' ஆகிய படங்களில் நடித்தனர். இந்நிலையில் தற்போது நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
