பொங்கல் தினத்தை முன்னிட்டு, கடந்த 10 ஆம் தேதி, தெலுங்கில் வெளியான திரைப்படம் 'வினயை விதேயா ராமா' இந்த படத்தில், தெலுங்கு  சூப்பர் ஹீரோ ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்கிறார். 

பொங்கல் தினத்தை முன்னிட்டு, கடந்த 10 ஆம் தேதி, தெலுங்கில் வெளியான திரைப்படம் 'வினயை விதேயா ராமா' இந்த படத்தில், தெலுங்கு சூப்பர் ஹீரோ ராம் சரண் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மிகப்பெரிய பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட படமான "வினயை விதேயா ராமா" தமிழில் வெளியாகிறது. 

பிரபல, தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த அப்படத்தில், கடந்த ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளியான 'பாரத் என்னும் நான்' படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ளார். விவேகம் படத்தில் வில்லனாக கலக்கிய பாலிவுட் நடிகர், விவேக் ஓப்ராய் இந்த படத்திலும் தன்னுடைய வில்லத்தனத்தை காட்டியுள்ளார்.

மேலும், பிரசாந்த்,சினேகா,மதுமிதா,முகேஷ் ரிஷி,ஜெபி,ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் உள்ளப்பட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், செண்டிமெண்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுது போக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா" உருவாகியுள்ளது.

தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது. கிளைமாக்ஸ் சண்டை காட்சி படம் படமாக்க மட்டும் பதினோரு கோடி ரூபாய் சிலவிடப்பட்டுள்ளது. கனல் கண்ணன் சண்டை பயிற்சி அளித்துள்ளார். டி வி வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் "வினயை விதேயா ராமா "பிப்ரவரி முதல் வாரம் தமிழ் நாடு மற்றும் கேரளமெங்கும் வெளியாக உள்ளதாக அதிகார பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.