prasanna scolding actor cum director sj suriya
எப்போதுமே நடிகர்களுக்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதில் போட்டிகள் இருந்துக் கொண்டே தான் இருக்கும். ஆனால் தற்போதுள்ள நடிகர்களே... திரையுலகில் நல்ல நடிகர் என்கிற பெயரை, தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைகிறார்களே தவிர, ஹீரோவாக தான் நடிக்க வேண்டும் என்று எண்ணுவதில்லை. 
அந்த வகையில், நியூ, வியாபாரி ஆகிய படங்களில் கதாநாயகனாக ஜெயிக்காத எஸ்.ஜே.சூர்யா இறைவி படத்தில் ஹீரோவாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றார். மேலும் சில மாதங்களுக்கு முன் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஸ்பைடர் படத்தில் கொடூரமான வில்லனாக நடித்தார். இந்த படத்தில் நடித்ததற்க்கு சிறந்த வில்லன் நடிகருக்கான விருதையும் பெற்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் நடிகர் பிரசன்னாவும் கலந்துக்கொண்டார். அப்போது மேடையில் பேசிய இவர், 'திருட்டு பயலே 2' படத்தில் நடித்த போது, வில்லன் கதாப்பாத்திற்காக எனக்கு விருது கிடைக்கும் என்று நினைத்தேன்.

ஆனால் திரையரங்கில் ஸ்பைடர் படம் பார்த்ததும், என் ஆசை நிராசையாகி விட்டது... மேலும் கண்டிப்பாக எனக்கு விருது இல்லை என்பதை முடிவு செய்துவிட்டேன். எஸ்.ஜே,சூர்யா, ஸ்பைடர் படத்தின் இண்டர்வல் பிளாக் வரும் போது, அவரை கெட்ட வார்த்தைகளில் என்னையே மீறி திட்டினேன் என கூறினார்.

இந்த விழாவில் நடிகர் பிரசன்னாவிற்கு, சிறந்த துணை நடிகருக்கான விருது பவர் பாண்டி படத்திற்காக கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
