சிக்கலில் இருந்த முன்னால் மனைவி... கைக்கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ்...!
தென்னிந்திய சினிமாவின் மிகச்சிறந்த குணசித்திர நடிகர்களில் ஒருவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் கடந்த 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதா குமாரியை திருமணம் செய்துக்கொண்டார். லலிதா குமாரி 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாப்பதிரத்தில் நடித்து பிரபலமானவர்.
மேலும் இவர் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரி என்பதும் குரிப்பிடதத்க்கது.
விவாகரத்து;
லலிதா குமரியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவருக்கு, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். 19பது வருடம் சிறந்த நட்சத்திர ஜோடிகளாக சேர்ந்த வாழ்ந்த இவர்கள். கருத்து வேறுப்பாடு காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். மனைவியை விட்டு பிரிந்தாலும் மகள் மற்றும் மகன்களுக்கு தேவையான அனைத்தையும் பிரகாஷ் ராஜ் செய்து வருகிறார்.
இரண்டாவது திருமணம்:
லலிதாகுமரியின் விவாகரத்துக்கு பின் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய 47வது வயதில், பாலிவுட் நடன இயக்குனர் போனி வர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.
முன்னால் மனைவிக்கு உதவிய பிரகாஷ் ராஜ்:
இந்நிலயில் நடிகர் பிரகாஷ் ராஜின் முன்னால் மனைவி லலிதா குமாரி, குடும்ப வருமானத்திற்காக பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்த தயாராகி வந்தாராம். ஆனால் சில காரணத்தால் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சி நிறுவனம் ஏற்க்க வில்லை என தெரிகிறது.
இதனை அறிந்த பிரகாஷ் ராஜ் தன்னுடைய முன்னால் மனைவி சிக்கலில் இருப்பதை தெரிந்து, அந்த நிர்வாகத்திற்கு நேரடியாக போன் செய்து சிக்கலை சரி செய்து, அந்த நிகழ்ச்சியை லலிதா குமரியே நடத்தும் படி ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக லலிதா குமரியும் தன்னுடைய முன்னால் கணவருக்கு நன்றி கூறியதாக கூறப்படுகிறது.