Dragon Movie Review : அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி இருக்கும் டிராகன் படத்தின் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது. லவ் டுடே படத்தின் வெற்றிக்கு பின் அவர் ஹீரோவாக நடித்துள்ள இரண்டாவது திரைப்படம் டிராகன். இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்துள்ளனர்.
டிராகன் திரைப்படத்தில் யூடியூப்பர்கள் விஜே சித்து, ஹர்ஷத் கான், இயக்குனர்கள் மிஷ்கின், கெளதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சுமார் 37 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் இன்று உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் முதல் ஷோ பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... முன்பதிவிலேயே தனுஷ் படத்தைவிட டபுள் மடங்கு வசூல்; மாஸ் காட்டும் டிராகன்!

டிராகன் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவுக்கு பாராட்டுக்கள். அவரது ரைட்டிங் சூப்பர். பிரதீப் ஒரு புது ஹீரோவாக உருவெடுத்திருக்கிறார். சூப்பர் பர்பார்மன்ஸ். மிஸ்கின், கெளதம் மேனன், அனுபமாவின் நடிப்பு பக்கா. ஹர்ஷத் கான் அசத்தி இருக்கிறார். லியோன் ஜேம்ஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. டைட்டில் ஐடியா, இண்டர்வியூ காட்சி, பிரேமம், பிறந்தநாள் காட்சி ஆகியவை விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் உள்ளது. மொத்தத்தில் ஒர்த்தான படம் என பதிவிட்டுள்ளார்.
டிராகன் படத்தின் முதல் பாதி சூப்பராகவும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் உள்ளது. ஒவ்வொரு காட்சியும் ஒரு ஆச்சர்யங்களுடனும் உள்ளது. திரைக்கதை வேறலெவல். பிரதீப் ரங்கநாதன் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றிருக்கிறார். மிஸ்கின் கதாபாத்திரம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு காட்சியும் படுத்தி உள்ளனர். லியோன் ஜேம்ஸின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நன்றாக உள்ளது. ஹர்ஷத், அனுபமா, ஜிவிஎம், கயாடு ஆகியோர் தங்கள் பெஸ்டை கொடுத்துள்ளார்கள். இயக்குனர் அஸ்வத் பக்கா காமெடி பேக்கேஜாக படத்தை கொடுத்துள்ளார். என குறிப்பிட்டுள்ளார்.
டிராகன் கண்டிப்பா பிளாக்பஸ்டர் தான். ரொம்ப பொறுப்பான, ஜனரஞ்சகமான, சிறப்பான படமாக உள்ளது. இந்த ஸ்கிரிப்டை வைத்து யார் வேண்டுமானாலும் நல்ல படம் எடுக்கலாம். ஆனால் அதை கலகலப்பாக கொண்டு சென்றதில் தனித்து நிற்கிறார் இயக்குனர் அஸ்வத். மொத்தத்தில் டிராகன், அஸ்வத் மாரிமுத்து சம்பவம் என பதிவிட்டுள்ளார்.
டிராகன் டீசண்டான முதல் பாதி, இண்டர்வெல் காட்சி அருமை. இரண்டாம் பாதி சூப்பராக உள்ளது. கிளைமாக்ஸ் பிளாக்பஸ்டர், மொத்தத்தில் படம் ஹிட் என தன் விமர்சனத்தை கூறி இருக்கிறார் நெட்டிசன் ஒருவர்.
எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம் இந்த வருடத்தின் மூன்றாவது பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படம் டிராகன். குடும்பஸ்தன் மற்றும் மதகஜராஜா படங்களை விட டிராகன் வசூலிக்கும். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
டிராகன் 100 சதவீதம் பிளாக்பஸ்டர். படம் முழுக்க என்ஜாய் பண்ணும் விதமாக இருந்தது. குறிப்பாக கெளதம் மேனன், பிரதீப் ரங்கநாதன் மற்றும் மிஷ்கின் வரும் காட்சிகள் அல்டிமேட். படம் ஒரே ஃபன் தான் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... டிராகன் படம் எப்படி இருக்கு? ரிலீசாகும் முன்னரே படம் பார்த்து முதல் விமர்சனம் சொன்ன சிம்பு
