தமிழில் தரமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களில் பிரபு சலாமான்னும் ஒருவர்.

இவரது படைப்பில் வெளிவந்த மைனா, கும்கி என ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவை இவருடைய படங்கள்.

ஆனால் இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த தொடரி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் இவர் தயாரிப்பில் இரண்டாவது முறையாக சந்திரன், ஆனந்தி, மற்றும் சின்னி ஜெயந்த் நடித்த ரூபாய் படம் வெளிவரவிருக்கின்றது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பிரபு சாலமன் ‘நான் தயாரித்த சாட்டை படம் சாட்டிலைட்ஸ் மட்டுமே ரூ 1.25 கோடிக்கு போனது.

ஆனால், தற்போது இந்த படம் அப்படியே நிற்கின்றது என்றும் , இனி என் தயாரிப்பில் எந்த படமும் வராது, ஏனெனில் நிலைமை அத்தனை மோசமாக உள்ளது’ என தயாரிப்பிற்கு முழுக்கு போடுவது போல் கூறியுள்ளார்.