prabudeva wrote the songs
தேவி படத்திற்கு பின், பிரபு தேவா மீண்டும் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். தேவி படத்தை தொடர்ந்து தற்போது பிரபு தேவா நடித்து வரும் படம் "யங் மங் சங்" இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அர்ஜுன் இயக்குகிறார். கே.எஸ்.சிவராமன் தயாரிக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடிக்கிறார். மேலும் தங்கர் பச்சான், சித்திரா லட்சுமணன், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை தான் முதல் முறையாக எழுதியுள்ளார். நடனம், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என கலக்கி வந்த பிரபுதேவா படலாசிரியராகவும் அறிமுகம் கொடுத்துள்ளார்.
இந்த பாடல் குறித்து பேசிய "யங் மங் சங்" படத்தின் இயக்குனர், அர்ஜுன் இந்த திரைப்படத்தில் மிக பிரமாண்ட மான பாடல் ஒன்று இருந்தது இந்த பாடலை சிறந்த படலாசிரியரை வைத்து எழுத திட்டமிட்டிருந்தோம்.
அப்போது இந்த பாடல் குறித்து, நிறைய டிப்ஸ்களை பிரபு தேவா கொடுத்தபோது, ஏன் இந்த பாடலை இவரையே எழுத வைக்க கூடாது என யோசனை தோன்றியது, இதனை அவரிடம் தெரிவித்ததும் முதலில் தயங்கிய அவர் பின் ஒத்துக்கொண்டார்.
பாடலை முழுமையாக எழுதி முடித்தவுடன் நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் அருமையாகவே இருந்தது, அதற்கு ஏற்றாப்போல் இசையமைப்பாளர் அம்ரீத் இசையமைத்துள்ளார்.
கண்டிப்பாக 'அய்யனாரு வந்துட்டாரு இங்க பாரு " என தொடங்கும் இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார், மேலும் இந்த பாடல் 300 நடனக்கலைஞர்களை ஆடவைத்து மிகவும் பிரமாண்டமாக எடுக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார்.
