இன்று  குடியரசு தலைவர் மாளிகளியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா, இந்த விருதினை பெற கலாச்சாரம் மாறாமல், வேஷ்டி சட்டையில் வந்து கலக்கியுள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இன்று குடியரசு தலைவர் மாளிகையில் 112 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் திரையுலகை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு விருதினை பெற்றனர். குறிப்பாக நடிகர் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருதும், பிரபுதேவா, பாடகர் சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

இதில் பத்மஸ்ரீ விருதை வாங்க நடிகர் பிரபுதேவா, தமிழர்களின் கலாசார உடையான வேட்டி சட்டை அணிந்து வந்தார். மேலும் தன்னுடைய தாய் தந்தையாருடன் இவர் விருதுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Scroll to load tweet…