prabudeva next film heroine is nivedha pethuraj
ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் கொடுத்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் வளர்ந்தது வெளிநாடாக இருந்தாலும். பிறப்பால் நம்ப மதுரை பொண்ணு தாங்க.

முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இவரது நடிப்பில் விரைவில் 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெளியாக உள்ளது. மேலும் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'பார்ட்டி' படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிகர் பிரபு தேவாவுடன் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் பல திறைமைகளை கொண்ட நடிகர்களில் ஒருவராக பிரபு தேவா, தேவி படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.எஸ்.அர்ஜுன் இயக்கத்தில் 'யங் மங் சங்', கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'மெர்குரி', இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் 'குலேபகாவலி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது அடுத்த படம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. சதுரம் 2 படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவிருக்கும் அடுத்த படத்தில் நடிக்க பிரபிதேவா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அந்த படத்தில் தான் நம்ப மதுரை பெண்ணு நிவேதா பெத்துராஜ், பிரபுதேவாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். விரைவில் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
