ஹிட் ஆன படத்தை, மற்ற மொழிகளில் ரீமேக் செய்து வழக்கம். இப்படி தமிழ், தெலுங்கு, இந்தி, என பல்வேறு மொழிகளில் படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியும் பெற்றுள்ளது.

ஆனால் நடிகர் பிரபுதேவா, அவர் நடித்த வெற்றி படத்தில் இருந்து ஒரே ஒரு பாடலை மட்டும் ரீமேக் செய்து நடனமாட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

பிரபுதேவா - நக்மா நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1994 ஆண்டு வெளியான திரைப்படம் காதலன். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த, அனைத்து பாடல்களும் சூப் டூப்பர் ஹிட் ஆனது.

இந்த படத்தில் பிரபுதேவா... அனல் பறக்க நடனமாடிய முக்காலா முக்காபுல்லா என்ற பாடலை, தற்போது இவர் நடித்து வரும் 'ஸ்ட்ரீட் டான்சர் 3 'ரீமேக் செய்து பயன்படுத்த உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.எனவே இனி பாடல்களை ரீமேக் செய்து பயன்படுத்தும் வழக்கம் ட்ரெண்ட் ஆகுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.