prabudeva movie shooting spot issue

பிரபுதேவா கிட்ட தட்ட 12 வருடத்திற்கு பின் நடித்து வெளியாகிய தேவி படத்துக்கு பிறகு மீண்டும் தீவிரமாக நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். 

இவர் சிவசக்தி புரொடக்ஷன் கம்பெனி தயாரிப்பில் லட்சுமி மேனனுடன் யங்மங்சங் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறாது. இதில் பங்கேற்கும் துணை நடிகர்கள் கும்பகோணத்தில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்தனர். இன்று காலை திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இதற்காக 10 வேன்களில் 100க்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் வேனில் சென்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களையும் எடுத்து சென்றனர்.

 பெரம்பலூரில் இருந்து கும்பகோணத்திற்கு ஜல்லி ஏற்றி வந்த லாரி வேன் மீது இவர்கள் சென்ற வேன் மோதியது. அதில் இருந்த சென்னையை சேர்ந்த துணை நடிகர் ஆறுமுகம், வேன் டிரைவர் விஜி ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள்.

துணை நடிகர்கள் செல்லப்பா, ராமமூர்த்தி, மோகன், பாப்பாத்தி அம்மாள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.அவர்களை பொதுமக்கள் மீது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அவர்களுக்கு தற்போது தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும் விபத்தில் சிக்கியகவர்களை பார்க்க பிரபு தேவா நேரில் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.