prabudeva fight with mumbai villans
தமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்று T.சிவாவின் அம்மா கிரியேசன்ஸ். அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் பார்ட்டி படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2 என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். 
பிரபல இந்தி தெலுங்கு நடிகையான அதாஷர்மா தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இது. மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, உள்ளிட்டோர் நடிகினறனர். கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம்.
படம் பற்றி இயக்குனர் ஷக்திசிதம்பரம் கூறியது…
முழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப் பட்டது. அத்துடன் பிரபுதேவா – சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரமாண்டமாக படமாக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
