prabudeva act karthi suburaj direction
நடிகர் பிரபுதேவா, நீண்ட இடைவெளிக்குப்பின் பின் தேவி படம் மூலம் நடிகனாக ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கவே அவருக்கு நடிப்பதற்கு பல வாய்ப்புகள் தேடிவந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில், தற்போது 'யங் மங் சங்', 'களவாடிய பொழுதுகள்', போன்ற சில படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவும் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். முன்னதாக தனுஷ் நடிக்க உள்ள படத்தை கார்த்திக் சுப்புராஜ் ஒப்பந்தம் செய்தார் என்றும், இதன் படப்பிடிப்பு அக்டோபரில் தொடங்கும் எனவும் தனுஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் தனுஷை இயக்குவதற்கு முன்பு புதிய படம் ஒன்றை இயக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டார். இதற்காக தீவிரமாக கதை எழுதிய கார்த்திக் சுப்புராஜ், பிரபுதேவாவிடம் அக்கதையை கூறியுள்ளார். கதை பிடித்து போக பிரபுதேவா கால்ஷீட் கொடுத்துள்ளார்.
பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிக்க சம்யுக்தா ஹெக்டேவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஒரே கட்டமாக மொத்த படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு.
