இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்த 'தேவி' திரைப்படம் கடந்த ஆயுதபூஜை தினத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த படம் ஹிட் ஆனதை அடுத்து இந்த படத்தின் தயாரிப்பாளரும், நாயகனுமான பிரபுதேவா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் இயக்குனர் விஜய்க்கு பிரபுதேவா நேற்று ஆடிக்கார் ஒன்றை பரிசளித்தார்.
இதை எதிர்பார்காத விஜய் ஆடி போய்விட்டாராம்.

இந்த படத்தின் இன்னொரு தயாரிப்பாளரான கே.கணேஷ் அவர்களும் இந்த சமயத்தில் உடனிருந்தார்.

இந்நிலையில் 'தேவி' வெற்றியை அடுத்து இயக்குனர் விஜய், ஜெயம் ரவி நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு 'குமரிக்கண்டம்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.