prabu deva acting stunt master
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், நடன இயக்குனர் என தன்னுடைய திறமையை பல விதத்தில் திரைத்துறையில் பிரதிபலித்து வருபவர் பிரபுதேவா.
இவர் நடித்த படங்களுக்கும், இவரின் நடன அசைவுகளுக்கு இன்று வரை பல இளைஞர்கள் ரசிகர்கள் தான்.
இந்நிலையில் 12 வருட இடைவேளைக்கு பிறகு இவர் நடிகராக ரீ என்ட்ரி கொடுத்த, தேவி படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்தது.
இதனால் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வரும் நிலையில், இவர் தற்போது நடித்து வரும் 'யங் மங் சங்' படத்தில் குங்பூ கற்று தரும் ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்கிறாராம்.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமி மேனன் நடித்து வருகிறார். மேலும் ஆர். ஜே .பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
